தமிழ்ப் பாரம்பரியம்
(Tamil Heritage Trust)
presents
பரதவர் வாழ்க்கையும் தொன்மங்களும்
(Life and Historical Beliefs of Fishermen)
by
ஜோ டி க்ரூஸ்
(Joe D Cruz)
at 5.30pm on Saturday, January 10th, 2014
at Vinoba Hall, Thakkar Bapa Vidyalaya, T Nagar.
பேச்சாளர் பற்றி:
ஜோ
டி க்ரூஸ், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள உவரி என்னும் கடலோர ஊரில்
பிறந்தவர். சென்னை லயோலா கல்லூரியில் எம் ஏ பட்டம் முடித்தார்.
திருச்சியில் உள்ள செய்ண்ட் ஜோசப் கல்லூரியில் தனது எம் ஃபில்லை
முடித்தார். மனைவி சசிகலா, இரண்டு குழந்தைகள் உண்டு. ஷிப்பிங் நிறுவனத்தில்
வேலையில் இருக்கிறார்.
‘ஆழி
சூழ் உலகு’ என்னும் நாவல் மூலம் இவர் பெரிதும் கவனம் பெற்றார். ஆழி சூழ்
உலகு நாவல், மீனவர்களின் (பரதவர்களின்) வாழ்க்கையைச் சுற்றிச் சுழலும் ஒரு
நாவல். மீனவர்கள் வாழ்க்கையின் பல்வேறு பிரச்சினைகளையும் அவலங்களையும்
பேசும் வெகு சொற்ப தமிழ் நாவல்களில் முதன்மையானது ‘ஆழி சூழ் உலகு’.
அந்நாவலின் வட்டார மொழி தமிழ் இலக்கியத்தில் முக்கியமான இடத்தைப் பெற்றது.
இந்நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் விருதைப் பெற்றது.
அவரது
இரண்டாவது நாவல் ‘கொற்கை’ சாகித்ய அகாதமி விருது பெற்றது. ‘கொற்கை’ நாவல்
தூத்துக்குடியைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழ்ந்த மீனவர்களின் நூறாண்டு கால
வாழ்க்கையைப் பற்றிப் பேசுகிறது.
இவரது இரண்டு நாவல்களுமே மிகப்பெரிய ஆய்வுக்குப் பிறகு எழுதப்பட்டவை என்பது முக்கியமானது.
‘மரியான்’ என்னும் தமிழ்த் திரைப்படத்துக்கு இவர் வசனம் எழுதியுள்ளார்.
இவரது
படைப்புகள் எல்லாமே மீனவர்களைச் சுற்றியே அமைந்துள்ளது. விடியாத
பொழுதுகள், எனது சனமே போன்ற குறும்படங்களையும் இவர் இயக்கியுள்ளார்.
கடற்கரையில் மீனவர்களுக்காகப் பாடுபடும் ஓர் ஆக்டிவிஸ்ட் என்று தான் அழைக்கப்படுவதையே க்ரூஸ் விரும்புகிறார்.
RSVP:
A. Annamalai: Gandhi Study Centre - gandhicentre@gmail.com;
S. Kannan - musickannan@gmail.com; 98414-47974
R. Gopu - writergopu@yahoo.com, 98417-24641
T. Sivasubramanian - siva.durasoft@gmail.com, 98842-94494