In her online Talk for THT, "Going North: Monks and Pilgrims from South India Journeying to Bihar", Dr Claudine Bautze-Picron discusses the important group of Kurkihar images, as well as the Saiva images found in Bihar that reflect a Southern influence. She will also introduce Saiva images from Eastern India which were brought back in the 11th c. to Tamil Nadu where they are still under worship.
Monks from all over India and Asia travelled to the Buddhist homeland in Bihar; the names of some of them have been preserved for posterity, though many more have remained anonymous. While journeying to Magadha, these monks stayed in different monasteries, such as the one which was located in Kurkihar where a large collection of stone and cast images and objects has been recovered. Some of them are inscribed with names of their donors who came from various cities like Kanchi and regions like Andhra.
About the Speaker:
Dr Claudine Bautze-Picron was till recently researcher at the “Centre National de la Recherche Scientifique” (National Centre for Scientific Research), Paris. Her research mainly concentrates on stylistic and iconographic issues in the art of eastern India (Bihar/West Bengal/Bangladesh) from the 8th to the 12th century. Beside numerous articles, she has published Eastern Indian Sculpture in the Museum of Indian Art, Berlin (Berlin, 1998); The Bejewelled Buddha from India to Burma, New Considerations (New Delhi, 2010), and The forgotten Place, Stone Sculpture at Kurkihar (New Delhi: Archaeological Survey of India, 2014). She is based in Berlin, Germany.
கோயில் கட்டிடக்கலையில் அறிவியல் - முனைவர் கே. தட்சிணாமூர்த்தி ஸ்தபதி
Saturday, 15th Oct 2022 5.30pm
Tamil Heritage Trust
கோயில் கட்டிடக்கலையில் அறிவியல்
பேச்சின்சுருக்கம்:
கோயில்கட்டிடங்கள் நாம் கண்ணால் பார்க்கக்கூடிய தொன்மையாகவும் (Tangible heritage), அவற்றைக்கட்ட கட்டிடக்கலைஞர்கள் பயன்படுத்திய அறிவியல், கணிதம்,அழகியல் போன்றவை கண்ணுக்குப் புலன்படாத தொன்மையாகவும் (Intangibleheritage) திகழ்கின்றன. கோயில் கட்டிடங்களில்தான் நமது பண்பாட்டின்அடித்தளம் இன்றளவும் வாழ்கிறது. இக்கட்டிடங்களில் இயற்கையின் அறிவியல் கோட்பாடுகள்கணிதக்கூறுகளாய், கட்டிடக்கலை அறிவியலாய், அழகியலாய் மறைந்திருக்கின்றன. நமது முன்னோர்கள் தங்களின் இயற்கை மற்றும் பிரபஞ்சம்குறித்தான அறிவியல் ஆய்வுகளை அழிக்க இயலாத கற்கோயில்களிலும், சிற்பங்களிலும் பதிவு செய்து விட்டுச்சென்றிருக்கின்றனர். முனைவர் க. தட்சிணாமூர்த்தி ஸ்தபதி அவர்கள் தன் சொற்பொழிவில்இந்த கருப்பொருளை விரிவுபடுத்தும் வகையில் தன் பரந்த அனுபவங்களின் அடிப்படையில்மலர்ந்த தன் ஆழ்ந்த புரிதலைப் பகிர்ந்துகொள்வார்.
பேச்சாளர்பற்றி:
முனைவர் கே. தட்சிணாமூர்த்தி ஸ்தபதி அவர்கள், கோயில் கட்டிடக்கலையில் B Sc பட்டமும், தத்துவம்,கலாச்சாரம் மற்றும் மதம் ஆகியவற்றில் எம்.ஏ பட்டுமும்பின்னர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றார். அவர், அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்த்ரேலியா,நியூஜீலாந்து, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் 100-க்கும்மேற்பட்ட கோயில்களை வடிவமைத்துள்ளார். தமிழ்நாடு இந்துசமய அறநிலையத் துறையின் ஆலோசகராகவும், திருப்பதியிலுள்ள TTD ஸ்ரீவெங்கடேஸ்வரா பாரம்பரிய சிற்பம் மற்றும் கட்டிடக்கலை நிறுவனத்தின் நிபுணர்ஆலோசனைக் குழு உறுப்பினராக பணியாற்றியுள்ளார். டாக்டர் விகணபதி ஸ்தபதியின் வாஸ்து வேத அறக்கட்டளையில் நிர்வாக அறங்காவலராக பதவிவகிக்கிறார்.. இவர், “உளிஎழுத்துக்கள்”, “The Architectural Legacy of Dharmaraja Ratha” மற்றும்,“The Introspection in Indian Architecture” என்ற மூன்று நூல்களைவெளியிட்டுருக்கிறார். முனைவர்தட்சிணாமூர்த்தி ஸ்தபதி அவர்கள் உலகெங்கும் விருதுகளால் கௌரவிக்கப்பட்டுள்ளார்.அவர்களுக்கு வழங்கபட்ட விருதுகளில்: தமிழ்நாடு அரசின் ‘கலை செம்மல்’ மாநில விருது, இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஸ்ரீ ராஜீவ்காந்தியிடமிருந்து ‘தங்கப் பதக்கம்’, சிங்கப்பூர் ஜனாதிபதி ஸ்ரீ. எஸ்.ஆர். நாதன் அவர்களிடமிருந்து ‘சில்ப கலா ரத்னம்’ பட்டம், கனடாவில் உள்ள மாண்ட்ரீலில் ‘சில்ப சூடாமணி’ விருது, கர்நாடக முன்னாள் முதல்வர்ஸ்ரீ. எஸ்.எம்.கிருஷ்ணா, அவர்களிடமிருந்து 'வாஸ்து சில்பகலா சாகரம்' ஆகியவை உள்ளடங்கும்.
Subscribe to:
Posts (Atom)