ஏ.கே. செட்டியார் : படம், ப​​யணம், பதிவு, ஆ.இரா.வேங்கடாசலபதி, 3 செப் 2016


தமிழ்ப் பாரம்பரியக் குழுமம்
(Tamil Heritage Trust)
presents
ஏ.கே. செட்டியார் : படம், ப​​யணம், பதிவு
by
ஆ.இரா.வேங்கடாசலபதி

at 5.30 PM on Saturday,
​September 3rd, 
2016
at Arkay Convention Center,
146/3 R.H.Road, OMS Lakshana (Above Shah Electronics), Mylapore, Chennai

தமிழ் பாராம்பரியம் சார்பாக நடைபெறும் மாதாந்திர உரை நிகழ்ச்சியில், செப்டம்பர் 2016 நிகழ்வாக,  ஏ.கே. செட்டியார் குறித்த உரை இடம்பெறுகிறது. உலகம் சுற்றும் தமிழன் என்று போற்றப்படும் ஏ.கே. செட்டியார் (1911–1983) அரிய பல சாதனைகளை நிகழ்த்தியவர். காந்தி வாழ்ந்த காலத்திலேயே அவரைப் பற்றிய முதல் முழு நீள ஆவணப்படத்தை 1940இல் இவர் தயாரித்தார். தமிழிலும் தெலுங்கிலும் அமைந்த இப்படத்தைப் பின்னர் இந்தியில் தயாரித்ததோடு அமெரிக்கா சென்று ஹாலிவுட்டிலும் அதன் ஆங்கில வடிவத்தை உருவாக்கினார். தமிழில் பயண இலக்கியத்துக்கு முன்னோடியான ஏ.கே. செட்டியார் ‘குமரி மலர்’ என்ற மாத இதழை நடத்தித் தமிழ்நாட்டு ஆராய்ச்சிக்கும் பெரும் பங்களிப்பு செய்தார். புகழை விரும்பாத ஏ.கே. செட்டியாரை அறிமுகப்படுத்தும் முயற்சியாக இச்சொற்பொழிவு அமையும்.
A. R. Venkatachalapathy (1967), Professor at the Madras Institute of Development Studies, Chennai, took his PhD in history from Jawaharlal Nehru University, New Delhi. He has taught at Manonmaniam Sundaranar University, Tirunelveli, the University of Madras and the University of Chicago, and has held research assignments in Paris, Cambridge, London, and Harvard. He was the ICCR Chair in Indian Studies at the National University of Singapore (2011–12). He was awarded the V.K.R.V. Rao Prize (History, 2007).

Chalapathy has published widely on the social, cultural and intellectual history of colonial Tamilnadu. Apart from his scholarly writings in English he has written/edited over twenty-five books in Tamil combining rigorous scholarly discipline with literary flair. His publications include The Province of the Book: Scholars, Scribes, and Scribblers in Colonial Tamilnadu (Permanent Black, 2012), In Those Days There Was No Coffee: Writings in Cultural History (Yoda Press, New Delhi, 2006), (ed.) Chennai, Not Madras (Marg, Mumbai, 2006), (ed.), In the Tracks of the Mahatma: The Making of a Documentary (Orient Longman, Delhi, 2006), (ed.) Love Stands Alone: Selections from Tamil Sangam Poetry (Penguin, 2010), and (ed.) Red Lilies and Frightened Birds: ‘Muttollayiram’ (Penguin, 2011). He is also the translator of Sundara Ramaswamy’s J.J.: Some Jottings (Penguin, 2016).

வேங்கடாசலபதி தமிழில் எழுதிய அல்லது தொகுத்த புத்தகங்களில் சில:
​​
ஆஷ் அடிச்சுவட்டில்: அறிஞர்கள், ஆளுமைகள்
ஏ.கே.செட்டியார், அண்ணல் அடிச்சுவட்டில்
பாரதி, கவிஞனும் காப்புரிமையும்
பாரதியின் விஜயா கட்டுரைகள்
முச்சந்தி இலக்கியம்
அந்தக் காலத்தில் காப்பி இல்லை முதலான ஆய்வுக் கட்டுரைகள்
திராவிட இயக்கமும் வெள்ளாளரும்
பின்னி ஆலை வேலைநிறுத்தம் (ஆ. சிவசுப்ரமணியனுடன் சேர்ந்து)
வ.உ.சியும் திருநெல்வேலி எழுச்சியும்

http://www.tamilheritage.in/
https://www.facebook.com/TamilHeritageTrust/

RSVP:

S. Swaminathan - sswami99@gmail.com; 2467 1501
Badri Seshadri - Kizhakku-p-padippakam - badri@nhm.in; 98840-66566
A. Annamalai: Gandhi Study Centre - gandhicentre@gmail.com;
S. Kannan - musickannan@gmail.com; 98414-47974
R. Gopu - writergopu@yahoo.com, 98417-24641
T. Sivasubramanian - siva.durasoft@gmail.com, 98842-94494

Tags: Video

வைணவ உரைகளும் தமிழ் மரபும், ம.பெ.சீனிவாசன், 13 ஆகஸ்ட் 2016


தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை
(Tamil Heritage Trust)
​​presents
​​
வைணவ உரைகளும் தமிழ் மரபும்
by 
​முனைவர் ம.பெ.சீனிவாசன்

at 5.30​ PM​ on Saturday, ​August 13th, 20​​16
​​
at Arkay Convention Center, 
146/3 R.H.Road, OMS Lakshana (Above Shah Electronics), Mylapore, Chennai

​நாலாயிர திவ்வியப் பிரபந்தத்துக்கு திருக்குருகைப் பிரான் பிள்ளான் , நஞ்சீயர், நம்பிள்ளை, பெரியவாச்சான் பிள்ளை, அழகிய மணவாளப் பெருமாள் ஜீயர் போன்றோர் தமிழும் வடமொழியும் கலந்த மணிப்பிரவாளத்தில் உரை எழுதியுள்ளனர். இருமொழியும் கலந்துள்ள காரணத்தால் இது பெரும்பாலானோரைப் போய்ச் சேரவில்லை. 12-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து 14-ம் நூற்றாண்டு வரை எழுதப்பட்ட இந்த உரைகளில் தமிழ் இலக்கிய மரபு மட்டுமல்ல, தமிழர்தம் வாழ்வியல் மரபும் பொதிந்துள்ளன.

பேராசிரியர் முனைவர் ம.பெ.சீனிவாசன், சிவகங்கையை அடுத்த சேந்தி உடையநாதபுரம் என்னும் சிற்றூரில் பெரியசாமி, சிட்டாள் ஆகியோருக்குப் பிறந்தவர். மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழ் பயின்று 34 ஆண்டுகள் கல்லூரி ஆசிரியராக இருந்து ஓய்வுபெற்றவர். ஆழ்வார்களின் அருளிச் செயல்களையும் வியாக்கியானங்களையும் விரும்பிக் கற்று அத்துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். வைணவ இலக்கியங்கள் குறித்துப் பல புத்தகங்களை எழுதியுள்ளார். பிற தமிழ் இலக்கியங்கள் குறித்தும் புத்தகங்கள் எழுதியுள்ளார். இராமானுஜர் குறித்தும் பெரியாழ்வார் குறித்தும் இவர் எழுதியுள்ள வாழ்க்கை வரலாற்று நூல்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.

​மாதம் தோறும் ​தமிழ் பாராம்பரியம் நடத்தும் ​​கூட்டத்தில்​, ஆகஸ்ட் 2016 நிகழ்வாக, வைணவ வியாக்கியானங்களிலிருந்து நாம் தெரிந்துகொள்ளும் தமிழர் மரபு குறித்து முனைவர் ம.பெ.சீனிவாசன் பேசுவார்.​ அனைவரும் வருக.​


RSVP:​​

S. Swaminathan - sswami99@gmail.com; 2467 1501
Badri Seshadri - Kizhakku-p-padippakam - badri@nhm.in; 98840-66566
A. Annamalai: Gandhi Study Centre - gandhicentre@gmail.com;
S. Kannan - musickannan@gmail.com; 98414-47974
R. Gopu - writergopu@yahoo.com, 98417-24641
T. Sivasubramanian - siva.durasoft@gmail.com, 98842-94494

Tags: Video