சீர்மிகு செங்கல் தளி - துக்காச்சி, இரா. விசுவநாதன், 4 பிப் 2017


தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை
(Tamil Heritage Trust) 
presents

சீர்மிகு செங்கல் தளி - துக்காச்சி

By

திரு. இரா. விசுவநாதன்

4th February 2017, Saturday @ 5.30 PM at Arkay Chennai Convention Center,
146/3 R.H.Road, OMS Lakshana (Above Shah Electronics), Mylapore,
தமிழ்ப் பாராம்பரிய  குழுமத்தின் சார்பாக நடைபெறும் மாதாந்திர உரை நிகழ்ச்சியில், பிப்ரவரி 2017 நிகழ்வாக, சோழர்கால செங்கல் கட்டுமானம், செங்கல்-சுதைச் சிற்பங்கள், ஓவியங்கள் ஆகியவை குறித்த உரை இடம்பெறுகிறது. அனுமதி இலவசம். அனைவரும் வருக!

தலைப்பு குறித்து...

கும்பகோணத்திலிருந்து நாச்சியார்கோவில் செல்லும் வழியில் உள்ள சிறு கிராமம் துக்காச்சி. இங்கு விக்கிரம சோழன் (ஆட்சியாண்டு 1117-35) காலத்தில் கட்டப்பட்ட கோவில், அருள்மிகு சௌந்தரநாயகி உடனுறை ஆபத்சகாயேசுவரர் திருக்கோயில். சோழர்கள் காலத்தில், ஏற்கெனவே இருந்த செங்கல் கோவில்கள் பலவும் கருங்கல் கோவில்களாக மாற்றிக் கட்டப்பட்டன. இப்பணி பின்னர் விஜயநகர, நாயக்கர் காலத்திலும் தொடர்ந்தது. ஆயினும் பல கோயில்களில் கோபுர மேல்பகுதி, விமானத்தில் மேல்பகுதி ஆகியவை செங்கல்-சுதை கட்டுமானங்களாகவே இருந்தன, இன்றும் இருக்கின்றன.

நாளடைவில் மாற்றங்கள் கண்டாலும்வெகுசில கோயில்களில் சோழர்கால செங்கல்-சுதைக் கட்டுமானங்களையும் சிற்பங்களையும் காணமுடிகிறது. அப்படிப்பட்ட கோயில்களில் மிக முக்கியமானது துக்காச்சி. கடந்த பல நூற்றாண்டுகளாக  திருப்பணி ஏதும் நடைபெறாத காரணத்தால் இக்கோயிலின் சில பகுதிகளில் சோழர்காலச் செங்கல்-சுதை வேலைப்பாடுகளைக் காண முடிகிறது.  ஆபத்சகாயேசுவரர் விமானத்தில் கடந்த ஓரிரு ஆண்டுகளில் மராமத்து வேலைகள் நடைபெற்றதில் பழமையான செங்கல் சுதை வேலைப்பாடுகள் அழிபட்டுவிட்டன. ஆனால் சௌந்தரநாயகி கோவில் விமானத்தில் இன்றும் சோழர்காலப் பழமைச் சிற்பங்களையும் கட்டுமானங்களையும் காணமுடிகிறது.சோழர்கால ஓவியங்களைப் பொருத்தமட்டில் நார்த்தாமலை விஜயாலயசோழீசுவரத்தில் மிகச் சிறு துணுக்குகள் கிடைத்துள்ளன. தஞ்சைப் பெரியகோயிலில் சோழர்கால ஓவியங்களை காணமுடிகிறது.  அதன் தொடர்ச்சியாக துக்காச்சியிலும் சிறிது காணக்கிடைக்கிறது.

பேச்சாளர் குறித்து...

திரு. இரா. விசுவநாதன் ஆவடியில் உள்ள சென்னை தேசிய கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் காட்சிவழி தகவல் தொடர்புத் துறையில் ஓவிய ஆசிரியராகப் பணிபுரிகிறார். சென்னை நுண்கலைக் கல்லூரியில் கல்வி கற்றவர். தொல்லியல் நினைவுச் சின்னங்களை நேரில் பார்வையிட்டு  அவற்றைப் புகைப்படங்களாக  ஆவணப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுவருகிறார். கோயில் சுவர்கள்மீது நடக்கும் திருப்பணிகள், அவை காரணமாக ஏற்படும் பாதிப்புகள், பணிகளின் நிறைகுறைகள் ஆகியவற்றை ஒப்பிட்டு புராதனச் சின்னங்களைச் சரியாகப் பாதுகாக்கவேண்டிய முயற்சிகளில் இவரும் இவருடைய நண்பர்களும் தொடர்ந்து ஈடுபட்டுவருகின்றனர்.

எமது நிகழ்ச்சிகள் பற்றிய விபரங்களை பேஸ்புக் மற்றும் இணையத்தளத்தில் காணலாம்.


RSVP:
S. Swaminathan - sswami99@gmail.com; 2467 1501
Badri Seshadri - Kizhakku-p-padippakam - badri@nhm.in; 98840-66566
A. Annamalai: Gandhi Study Centre - gandhicentre@gmail.com;
S. Kannan - musickannan@gmail.com; 98414-47974
R. Gopu - writergopu@yahoo.com, 98417-24641
T.Sivasubramanian - siva.durasoft@gmail.com, 98842-94494

Tags: Video