A World without Water: An Artist’s Exploration of Natural Heritage, R. Viswanathan, 2nd June 2018


Tamil Heritage Trust
presents
A World without Water: An Artist’s Exploration of Natural Heritage
by
R. Viswanathan
7th April 2018, Saturday 5:30 PM at Arkay Chennai Convention Center,
146/3 R.H.Road, OMS Lakshana (Above Shah Electronics), Mylapore, Chennai

தலைப்பு பற்றி:

புறவுலகில் நிகழும் சிறுசிறு நிகழ்வுகளில் கவரப்பட்ட மன ஓட்டத்தின் தொடரியக்கமே நம்மைச் சுற்றியுள்ள பல்லுயிரியத்தை பகுத்துணரத் து’ண்டுகிறது. ‘ஆவடிக்கு வரும் அகலவாயனின்  அ(ல)ழகில் ஆரம்பித்து அரிவாள் மூக்கனில் ஜொலித்து, செயல் வீரர்களான சாம்பல் மற்றும் செந்நாரையனின் தீரத்தைக் கண்டு வியந்து, சங்குவளை நாரையனுடன் வட்டமடித்து, கொரட்டூரின் பெருமந்தை கூழைக்கடாக்களினூடாக என்னுள்ளம் சிறுதுளி பெருவெள்ளமென அலைபாய்கிறது’ என்கிறார் விசுவநாதன்.
விசுவநாதனும் அவரது மாணவர்களும் நன்னீர் நிலையின் பல்லுயிரியர்களின் அசைவை படமெடுத்திருக்கிறார்கள். அது குறித்த அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.
பேச்சாளர் குறிப்பு:

திரு. இரா. விசுவநாதன் ஆவடியில் உள்ள சென்னை தேசிய கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் காட்சி வழி தகவல் தொடர்புத் துறையில் ஓவிய ஆசிரியராகப் பணிபுரிகிறார். கும்பகோணம்   நுண்கலைக் கல்லூரியில் கல்வி கற்றவர். தொல்லியல் நினைவுச் சின்னங்களை நேரில் பார்வையிட்டு  அவற்றைப் புகைப்படங்களாக  ஆவணப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுவருகிறார். புராதன கோயில்களில் திருப்பணி என்னும் பெயரால் நடைபெறும் அத்துமீறல்கள், அதனால் ஏற்படும் பாதிப்புகள், நிறை குறைகள் ஆகியவற்றை வெளிச்சத்துக் கொண்டு வந்து, தமிழகத்தின் புராதனச் சின்னங்களை பேணி, பாதுகாக்க வேண்டி பல்வேறு விழிப்புணர்வூட்டும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.

About the topic:
When Viswanathan stared out of the window of his class room during a rare moment of distraction, he could not help but be drawn to the chatter of the birds around the lake not very far from his college.  He went very close to the window almost pressing him to the somewhat rusting frame. To his untrained eye all the birds looked the same from the distance. Someone among the students muttered Painted stork. He quickly turned around trying spot that person. Suddenly the silence in the class was louder than the crackle of the birds.
It became a routine for Viswanathan, during the short breaks, to look through the window trying to identify several types of birds that flocked that water body.  The artist in him would record the shape and colours the birds. He would go back home sketch and add colour to the images that he carefully preserved in his memory. But he was increasingly becoming dissatisfied with what he reproduced. He then decided to fly out of the walls and get closer to the objects of his curiosity.
Some of his students volunteered to watch the birds with him. Once closer, the sheer variety and number of birds astounded them. There were plants and organisms too, small, medium and big. They would make notes, take pictures and shoot videos. References off-line and online helped delineate the blurry lines and identify many birds with the confidence of a victor. The smile of the success made them explore other water bodies in their ‘water bowl’ of an extended neighbourhood. The results surprised them.
Viswanathan and his small team will be at Tamil Heritage Trust to share their unalloyed joy, the journey of discovery brings.
About the Speaker:
R Viswanathan, having graduated from Government College of Fine Arts, Kumbakonam teaches Painting to the students of Department of Visual Communication of Chennai National Science & Arts College, Avadi.  He has been photo-documenting many historically and archaeologically important but not well-known sites. He has been fighting against the thoughtless destruction of precious built heritage, in the name of repair and renovation.

Entry for the event is absolutely FREE; No registration required. The event will also be available on LIVE.

Tags: Video

ஈழத்து கர்நாடக இசைப் பாரம்பரியமும் தவில் மேதை யாழ்ப்பாணம் தெட்சணாமூர்த்தியும், அம்ஷன் குமார், 5 மே 2018


Tamil Heritage Trust

Presents
Carnatic Music tradition of Srilanka & Tavil Vidwan Yazhpanam Thedchanamoorthy

ஈழத்து கர்நாடக இசைப் பாரம்பரியமும்  தவில் மேதை யாழ்ப்பாணம் தெட்சணாமூர்த்தியும்
by
Amshan Kumar
5th May 2018, Saturday 5:30 PM at Arkay Chennai Convention Center,
146/3 R.H.Road, OMS Lakshana (Above Shah Electronics), Mylapore, Chennai

About the Topic:
The ethnic connection between the Tamils in India and the Tamils in Sri Lanka is long and continuous. However, interactions between them in the fields of art, music and literature have been documented only in the recent past. Starting from 19th century, a steady flow of Carnatic musicians played key roles as cultural ambassadors between these two countries, enriching and extending the frontiers of music.  It is in this context the genius of Tavil maestro Yazhpanam Thedchanamoorthy has to be understood. Thedchanamoorthy`s ancestors migrated from Tamil Nadu. As a young lad, he came to Tanjore to learn Carnatic Music under the guidance of many musicians and as an adult, he came back to inspire generations of Carnatic musicians in Tamil Nadu. He lived only for 42 years and died in 1975.
Film Maker Amshan Kumar will give an outline of the musical heritage of Sri Lanka and present his national award winning Tamil documentary, 'Yazhpanam Thedchanamoorthy - Music Beyond Boundaries' that chronicles the art and times of Thedchanamoorthy and the close ties of the musicians of the two countries.
தலைப்பு பற்றி :
இந்தியத் தமிழர்களுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் இடையேயான பந்தம், நீண்ட நெடியதும், தொடர்ச்சியானதும்கூட.  ஆனாலும், கலை, இலக்கியம், இசை போன்ற துறைகளில் நிகழ்ந்த கலாசாரப் பரிவர்த்தனைகள் கடந்த சில நூற்றாண்டுகளாகத்தான்  பதிவு செய்யப்பட்டுள்ளன. பத்தொன்பதாம் நூற்றாண்டு தொடங்கி, ஏராளமான இசைக்கலைஞர்கள், கலாசாரத் தூதுவர்களாக இருந்திருக்கிறார்கள். தவில் இசைக்கலைஞர் யாழ்ப்பாணம் தெட்சணாமூர்த்தி அவர்களில் குறிப்பிடத்தக்கவர். அவரது முன்னோர்கள் தமிழகத்திலிருந்து இலங்கைக்கு இடம்பெயர்ந்தவர்கள். கர்நாடக இசையில் தேர்ச்சி பெறுவதற்காக சிறு வயதில் தஞ்சாவூர் வந்த தெட்சணாமூர்த்தி, பின்னாளில் புகழ் பெற்ற தவில் கலைஞராக தமிழ்நாட்டிற்கு வருகை தந்து, தனது இசை மூலம் அடுத்த தலைமுறைகளுக்கு ஆதர்சமாக விளங்கினார். 42 வயது வரை மட்டுமே வாழ்ந்த தெட்சணாமூர்த்தி, 1975ல் மறைந்தார்.
திரைப்பட இயக்குநர் அம்ஷன் குமார், இலங்கையின் இசைப் பாராம்பரியம் குறித்த அறிமுகத்துடன், தன்னுடைய இயக்கத்தில் வெளிவந்த, 'யாழ்ப்பாணம் தெட்சணாமூர்த்தி - எல்லைகளைக் கடந்த இசை' என்னும் தேசிய விருது பெற்ற  ஆவணப்படத்தைத் திரையிட்டுப் பேசவிருக்கிறார்.
About the Speaker:
Amshan Kumar is a National Award winning Film Maker and writer.  His first Tamil feature film ‘Oruthi’ was based on a story by the celebrated Tamil writer Ki. Rajanarayanan and it won several awards. His second feature film 'Manusangada' has been screened in several International Film Festivals. He is also a prolific documentary film-maker. Some of his documentaries include biographies of eminent people like the Nobel laureate C.V.Raman, Poet Subrahmania Bharati, writer Ashokamitran and Carnatic singer Manakkal Rangarajan. His book ‘Cinema Rasanai’ is well appreciated and has been prescribed as a text in several universities in India and Sri Lanka.

பேச்சாளர் பற்றி
அம்ஷன் குமார், நன்கு அறியப்பட்ட திரைப்பட இயக்குநர். கி.ராஜநாராயணனின் கதையைத் தழுவி இவர் இயக்கிய ‘ஒருத்தி’ திரைப்படம் ஏராளமான விருதுகளை பெற்றுத்தந்தது. இரண்டாவது படமான ‘மனுஷங்கடா’, பல உலகத் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளது.  நோபல் பரிசுபெற்ற விஞ்ஞானி சி.வி. ராமன், மகாகவி சுப்ரமணிய பாரதியார், எழுத்தாளர் அசோகமித்திரன், கர்நாடக இசைப்பாடகர் மணக்கால் ரங்கராஜன் ஆகியோர் குறித்து ஆவணப்படங்களை இயக்கியிருக்கிறார். ‘சினிமா ரசனை’ என்னும் இவரது புத்தகம் பரவலான வரவேற்பைப் பெற்று, இந்திய, இலங்கைப் பல்கலைக்கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டுள்ளது.


Entry for the event is absolutely FREE; No registration required. The event will also be available LIVE @ https://www.youtube.com/watch?v=82DTMZRiwLA