தமிழ்ப் பாரம்பரியம்
(Tamil Heritage Trust)
presents
ஆரணியும் ஆறு கதைகளும்
(Arani and Six Stories)
by
மோகன் ஹரிஹரன்
(Mohan Hariharan)
at 5.30pm on Saturday, November 7th, 2015
at Vinoba Hall, Thakkar Bapa Vidyalaya, T Nagar.
ஆரணி
என்றவுடன் பலருக்கும் தெரிவது பட்டுச் சேலைகள் மட்டுமே. ஆனால் பலரும்
அறியாத பல வரலாற்றுச் சிறப்புகள் வாய்ந்த இந்த இடத்தைச் சுற்றிப் பார்க்கப்
போகிறோம்! போர், வீரம், காதல், மக்கள் மாண்பு, மதம், அரசர்களின் வாழ்வு,
பழமை வாய்ந்த கோவில்கள் ,விடுதலைப் போராட்டம்... இவற்றுடன் பின்னிப்
பிணைந்த குணாதிசியங்கள்... இவை அனைத்தையும் உள்ளடக்கி 1965 வரையான
நிகழ்வுகளை ஒரு தொகுப்பாகக் கொடுப்பதே இந்தப் பேச்சின் நோக்கம்.
68
வயதாகும் மோகன் ஹரிஹரன் ஆரணியில் பிறந்து வளர்ந்தவர். ஏ.சி.டெக்
கல்லூரியில் கட்டடவியலில் பட்டம் பெற்றவர். புகழ்பெற்ற கட்டடக்கலை நிபுணர்
கே.என். சீனிவாசன் கீழ் பணிபுரிந்தார். அப்போது இவர் பங்குபெற்று வடிவமைத்த
கட்டடங்கள் தமிழகத்தில் பெரும்புகழ் பெற்றவை. உதாரணம்: சென்னையின் தேவி,
சத்யம், ஈகா திரையரங்குகள், காமராஜர் கலை அரங்கம், திருச்சியின் கலை
அரங்கம் மற்றும் மாரிஸ் தியேட்டர், கோவையின் ராகம், தானம், பல்லவி, மேலும்
தென்னிந்தியா முழுவதும் பல்வேறு தொழிற்சாலைகள்.
1981
முதல் தனியாகத் தொழில் புரிந்துவரும் இவர் பாண்ட்ஸ்-இந்துஸ்தான் லீவர்,
அர்ஜுன் டெக்னாலஜீஸ், பல்வேறு மருந்து உற்பத்தி நிறுவனங்கள் ஆகியோரது
தொழிற்சாலைகளை வடிவமைத்துள்ளார். சவீதா பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற
பள்ளிக்கூடமான ‘தி ப்யூபில்’ இவர் வடிவமைத்தது. அன்னை சத்யா நகர் சேரியை
மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார். ஏழை கட்டுமானத் தொழிலாளர்களுக்குத்
தொடர்ச்சியாகக் கட்டுமானத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை வழங்கிவருகிறார்.
ஓவியம் வரைதல், தோட்டப் பராமரிப்பு, சமைத்தல், ஒயின் தயாரித்தல் ஆகியவை இவருடைய பொழுதுபோக்குகள்.
RSVP:
A. Annamalai: Gandhi Study Centre - gandhicentre@gmail.com;
S. Kannan - musickannan@gmail.com; 98414-47974
R. Gopu - writergopu@yahoo.com, 98417-24641
T. Sivasubramanian - siva.durasoft@gmail.com, 98842-94494