செந்தமிழ் ஊரெனும் பேரினிலே, எஸ் கண்ணன், 7 செப் 2019

தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை
வழங்கும்   
"செந்தமிழ் ஊரெனும் பேரினிலே"
உரை
S கண்ணன்
7th September 2019, Saturday 5:30 PM at Arkay Convention Center,
146/3 R.H.Road, OMS Lakshana (Above Shah Electronics), Mylapore, Chennai 
தலைப்பு  பற்றி
திரு கண்ணின் உரை தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களின் ஊர்களின் இடு பெயர் வழக்கு அல்லது இடம்பெயர்களியல் பற்றியது. மேலோட்டமாக பார்க்கும் போது ஊர் பெயர்களின் உட்பொருள் தெரிய வாய்ப்பில்லை. சில ஊர்களின் பெயர்கள் நமக்கு வேடிக்கையாகவும் வியப்பை தருவதாகவும் இருக்கும். ஆனால் ற்று கவனிக்கும் போது அவை நமக்கு  இடவியல்பு விளக்க விவரங்கள், சமூக இயக்கவியல், ஆட்சி மரபுக்குழுக்கள், வட்டார வரலாறு, சரித்திர ரீதியில் அதன் பங்கு, பழக்க வழக்கங்கள், மற்றும் பல தகவல்களை நமக்கு வெளிக்காட்டும். உதாரணத்திற்கு, பல கிராமப்புற பெயர்கள் அந்நிலத்துக்கே உரித்தான எளிமையுடன்  விளங்குவதை காண்கிறோம்.. ஊர்களின் பெயர்கள் சாதரணமாக இருந்தாலும் சில சமயம் தனித்தன்மையும் முக்கியத்துவமும் இருக்கின். திரு கண்ணனின் உரை, ஊர் இடப் பெயர்களின் தோற்றவரலாற்றின் பொதுவான கூறுகளை விளக்கும் விதமாக அமையும். 
பேச்சாளர் பற்றி
 பலருக்கும் இசை கண்ணன் (Music Kannan) என்று தெரியப்படுபவர். இவர் இயற்பியல் இளங்கலை பட்டம் பெற்று பிறகு மெய்யியலில் முதுகலை பட்டம் பெற்றவர். கணக்கியல் மற்றும் வரிவிதிப்பு துறைகளில் சான்றிதழ் பெற்றிருக்கிறார். வங்கியில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். நுண்கலைகள் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். பழங்கால, சமகால தமிழ் இலக்கியத்தின் மீது மிகுந்த பற்றுடையவர். இவருக்கு விஞ்ஞானம் மீதும் அலாதியான நாட்டம் உண்டு. நாட்யரங்கம் மற்றும் ஆன்மஜோதி அமைப்புகளில் பங்காற்றுகிறார். தமிழ் பாரம்பரிய அறக்கட்டளையின் நிறுவன உறுப்பினரில் ஒருவர். 
Tamil Heritage Trust 
Presents   
Names of Places – Their Story
A talk in Tamil by
S Kannan
7th  September 2019, Saturday 5:30 PM at Arkay Convention Center,
146/3 R.H.Road, OMS Lakshana (Above Shah Electronics), Mylapore, Chennai 
About the Talk
The speech will dwell on the nomenclature of places (Toponymy) in Tamil Nadu & to some extent adjoining states. The names per se may convey nothing to us. But, on closer scrutiny, they have something to offer on their topography, social dynamics, ruling clan, local history or part of the main historical movement at a particular point of time, local custom or outlook, etc. In some cases, the very name itself will be amusing.  The rural names will be revealing of the underlying rustic simplicity! But, first &foremost, the talk will draw one's attention towards the generality or common nature behind the genesis of many of our place names of yore. After all, place names are not that nonsensical or obscure, worldwide!  They are not unromantic but significant, one way or the other. 
About the Speaker
 S.Kannan (Music Kannan) is a Founder-member of Tamil Heritage Trust. After retiring from bank service, he has devoted his time to the pursuit of his passion in fine arts, study of Thamizh literature (ancient & modern) and popular science. He is a Postgraduate in Philosophy with a basic degree in Physics. He also holds a ' Diploma in Accountancy & Taxation Laws'. He is connected with organizations like Natyarangam and Aanmajothi. 
 Entry for the event is FREE; No registration required. The event will also be available on LIVE. For further details, please visit http://www.tamilheritage.in & Tamil Heritage Trust.