தமிழ்ப் பாரம்பரியம்
(Tamil Heritage Trust)
presents
என் குறள்
(My Couplets)
by
இசைக்கவி ரமணன்
(Isaikkavi Ramanan)
at 5.30pm on Saturday, August 2nd, 2014
at Vinoba Hall, Thakkar Bapa Vidyalaya, T Nagar.
About the topic:
- எத்தனையோ கவிதைகள், பாடல்களுக்கு இடையே, இடைவிடாத பயணங்களுக்கு நடுவே, கடுமையான அலுவலகச் சுமைகளுக்கு ஊடே, கொடுமையான வாழ்க்கைச் சூழ்நிலைகளுக்கும் மத்தியில், மூவாயிரத்திற்கும் மேற்பட்ட குறள் வெண்பாக்கள் என்னிடம் பிறந்தன.
- இவை திருக்குறள் போலவே குறள் வெண்பா இலக்கணத்தில் அமைந்துள்ளன. ஒற்றுமை அத்தோடு முடிகிறது! வள்ளுவரின் ஞானத்திற்கு நானெங்கு போவேன்?
- வாழ்வியல், சமூகம், யோகம் போன்றவை சார்ந்த இந்தக் குறட்பாக்களை நான் இன்னும் முழுமையாகப் பார்க்கவில்லை. நிறையத் திருத்தங்கள் செய்ய வேண்டியிருக்கிறது.
- இந்த நிகழ்ச்சி என்னை அந்தப் பணியில் தூண்டும் என்று நினைக்கிறேன். இவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கவேண்டும் என்னும் எண்ணமும் இருக்கிறது.
About the Speaker:
- பிறந்தது நெல்லையில் 30.03.1954/வளர்ந்தது சென்னையில்/ வணிகவியல் பட்டதாரி
- தந்தை அமரர் திரு. த.வெ. அனந்தராமசேஷன் வடமொழியில் ஆசுகவி, ஆங்கில/பொருளாதார விற்பன்னர்/ தி ஹிண்டு நாளிதழில் உதவி ஆசிரியராக 23 ஆண்டுகள் பணிபுரிந்தார்
- நான் தி ஹிண்டு நாளிதழில் 27 ஆண்டுகள் பணிபுரிந்து, விசாகப்பட்டினத்தில் வட்டார மேலாளராக (Regional Manager) பணிபுரியும் போது, ஓய்வுக்குப் 10 ஆண்டுகள் முன்பே ஊழியத்திலிருந்து விலகிக்கொண்டேன்
- என்னுடைய ஒரே அடையாளம் நான் தமிழ்க்கவிஞன் என்பதே. பாடல்கள் புனைந்து பாடுவதும் உண்டு.கவிதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு, சுய முன்னேற்றம் என, சில நூல்களும், குறுந்தகடுகளும் வெளிவந்துள்ளன. ஆங்கிலத்தில் இரண்டு நூல்கள்
- யாத்ரி. 30 முறை இமயப் பயணம். புகைப்படக் கலையில் ஆர்வம்
- தொலைக்காட்சி நெடுந்தொடர்களில் நடித்து வருகிறேன்
RSVP:
A. Annamalai: Gandhi Study Centre - gandhicentre@gmail.com;
Badri Seshadri - Kizhakku-p-padippakam - badri@nhm.in; 98840-66566
S. Kannan - musickannan@gmail.com; 98414-47974
S. Swaminathan - sswami99@gmail.com; 2467 1501
R. Gopu - writergopu@yahoo.com, 98417-24641
T. Sivasubramanian - siva.durasoft@gmail.com, 98842-94494