Tamil Heritage Trust Pechchu Kutchery 2014

தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை பேச்சுக் கச்சேரி 2014
Tamil Heritage Trust Pechchu Kutchery 2014

பேச்சுக் கச்சேரி 2014

தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் மாதத்தில் ‘பேச்சுக் கச்சேரி’ என்ற நிகழ்ச்சியை நடத்திவருகிறது. பலதுறை அறிஞர் முனைவர் இரா.நாகசாமி, பல்வேறு துறைகளுக்கு ஆற்றியுள்ள பங்களிப்பை விளக்கும் வகையில் இந்த ஆண்டு நிகழ்வுகள் இருக்கும்.

இந்த நிகழ்வுகள் அனைத்தும் 24 டிசம்பர் முதல் 28 டிசம்பர் வரை, காலை 10-12 மணிக்கு, சென்னை எல்டாம்ஸ் சாலையிலுள்ள தத்வாலோகா அரங்கில் நடைபெறும்.

24 டிசம்பர் 2014:
    நாகசாமியின் ‘ஓவியப்பாவை’ நூல் குறித்த ஓர் ஆவணப்படம்
    நாகசாமியின் பதிப்பிக்கப்பட்ட சில ஆராய்ச்சிக் கட்டுரைகள் குறித்து - ர. கோபு

25 டிசம்பர் 2014:
    கல்வெட்டியல் துறையில் நாகசாமியின் பங்களிப்பு - மார்க்சிய காந்தி
    காசு ஆராய்ச்சியில் நாகசாமியின் பங்களிப்பு - பூங்குன்றன்

26 டிசம்பர் 2014:
    அகழ்வாய்வில் நாகசாமியின் பங்களிப்பு - துளசிராமன்
    செப்புத் திருமேனிகள் குறித்து நாகசாமியின் பங்களிப்பு - ஶ்ரீதரன்

27 டிசம்பர் 2014:
    தமிழுக்கு நாகசாமியின் பங்களிப்பு - கிருஷ்ணமூர்த்தி
    சமய, தத்துவத் துறைகளில் நாகசாமியின் பங்களிப்பு - பத்மாவதி

28 டிசம்பர் 2014:
    முனைவர் நாகசாமி அவருக்கு விருப்பமான இரண்டு தலைப்புகளில் பேசுவார்.

====

Petchu Kutcheri 2014

Every year, in the month of December, Tamil Heritage Trust organizes a series of talks on a variety of heritage topics. This year will be dedicated to the contributions by the scholar Dr. R. Nagaswamy to various fields of work.

Talks will be held at Tatvaloka, Eldams Road, Chennai, from 24th to 28th December 2014, between 10 AM to 12 Noon.

24rd December 2014:
    A short documentary on Nagaswamy's book 'Oviyappavai'
    On some papers published by Nagaswamy - R. Gopu    

25th December 2014:
    Nagaswamy's contribution to epigraphy - Marxia Gandhi
    Nagaswamy's contribution to the study of coins - Poongundran

26th December 2014:
    Nagaswamy's contribution to excavation - Thulasiraman
    Nagaswamy's contribution to bronzes - Sridharan

27th December 2014:
    Nagaswamy's contribution to Tamil - Krishnamoorthy
    Nagaswamy's contribution to religion and philosophy - Padmavathi

28th December 2014:
    Dr. R. Nagaswamy will give special lectures on two topics of his choice.
 
RSVP:
Badri Seshadri - Kizhakku-p-padippakam - badri@nhm.in; 98840-66566
S. Kannan - musickannan@gmail.com; 98414-47974
S. Swaminathan - sswami99@gmail.com; 2467 1501
R. Gopu - writergopu@yahoo.com, 98417-24641
T. Sivasubramanian - siva.durasoft@gmail.com, 98842-94494

கல்லில் ஒரு கவிதை - கைலாசநாதர் கோவில் - கோபு (வீடியோ)

தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் ர.கோபு 14.11.2014 அன்று ஆற்றிய உரை.


R Gopu, Poetry in Stone, Kanchi Kailasanatha Temple, November 14, 2011, Video

சாதாரண மனிதர்களின் வாழ்வின் ஊடாகப் புதுக்கோட்டையின் வரலாறு - க.இராசேந்திரன்

தமிழ்ப் பாரம்பரியம்
(Tamil Heritage Trust)
presents
சாதாரண மனிதர்களின் வாழ்வின் ஊடாகப் புதுக்கோட்டையின் வரலாறு 
(History of Pudukkottai through Life of Common People) 

by 

க. இராசேந்திரன்
(K. Rajendran)

at 5.30pm on Saturday, December 6th, 2014
at Vinoba Hall, Thakkar Bapa Vidyalaya, T Nagar.

About the topic:
வரலாறு எனப்படுவது அரசர்கள், ஆட்சியாளர்கள் அல்லது பிரபலமானவர்களின் கதைகள் மட்டுமல்ல. சாதாரணர்கள் இல்லாமல் நாடுகளும் உருவாவதில்லை, வரலாறும் படைக்கப்படுவதில்லை. ஆனால், சாதாரணர்களின் வாழ்க்கையைப் பதிவு செய்வதற்குத்தான் வரலாற்றாசிரியர்கள் இருப்பதில்லை. இதற்கு மாறாக, க.இராசேந்திரன் அந்தச் செயலை மிகச் சிறப்பாகச் செய்துவருகிறார். இந்தச் சொற்பொழிவின்போது, அறியப்படாத சில நபர்களின் வாழ்க்கை மூலமாக புதுக்கோட்டையின் கடந்த நூற்றாண்டின் வரலாற்றைக் குறித்து இராசேந்திரன் பேசப்போகிறார்.
About the Speaker:

தஞ்சாவூரில் பிறந்த க. இராசேந்திரன், எம்.ஏ. எம்.எட், திராவிட இயக்கப் பின்னணியிலிருந்து வந்தவர். இவருடைய தந்தை இராம. கல்யாணசுந்தரம் புதுக்கோட்டையில் 1928-ல் சுய மரியாதை இயக்கத்தைத் தொடங்கியவர். 1944-ல் திராவிடக் கழகக் கிளையை புதுக்கோட்டையில் நிறுவியவர்.
இராசேந்திரன் புதுக்கோட்டை அரசர் கல்லூரியில் பி.எஸ்சி கெமிஸ்ட்ரி பட்டம் பெற்று, புதுக்கோட்டை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பி.எட், எம்.எட் பயின்றார். புதுக்கோட்டை மாவட்டத்தில் பல இடங்களில் ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் சென்னையைச் சுற்றியுள்ள பல பள்ளிகளில் ஆசிரியராக இருந்துள்ளார். சென்னை பல்கலைக்கழகத்திலிருந்து எம்.ஏ வரலாறு பட்டம் பெற்றுள்ளார்.
இராசேந்திரன் பத்திரிகைகளில் பல கட்டுரைகள் எழுதியுள்ளார். மூன்று நூல்களையும் எழுதியுள்ளார். மூன்று நூல்களுமே கையெழுத்துப் பிரதிகளாக மட்டுமே உள்ளன. அச்சாக்கம் பெறவில்லை. 
முதலாவது நூல், ‘புதுக்கோட்டை மாவட்டத்தில் சுய மரியாதை இயக்கமும் திராவிடர் கழகமும் வளர்ந்த உண்மை வரலாறு’. இவ்வியக்கங்களின் தோற்றம் குறித்த இதுபோன்ற ஒரு நூல் வேறு எந்த மாவட்டத்துக்கும் கிடையாது. இவருடைய இரண்டாவது நூல், ‘புதுக்கோட்டை மாவட்டத்தில் காற்றில் கலந்த கறுப்பு மெழுகுவர்த்திகள்’. திராவிடர் இயக்கத் தொண்டர்களைப் பற்றிய நூல் இது. மூன்றாவது நூல், ‘புதுக்கோட்டைப் புதையல்கள்’. புதுக்கோட்டையின் மிகச் சாதாரண மனிதர்கள் முதல் பிரபலமானவர்கள் வரை பலரது வாழ்க்கையைத் தொகுத்து, அந்நகரைப் பற்றிய பல அரிய தகவல்களைச் சேர்த்து, பல்வேறு செய்தித்தாள் துண்டுகளையும் இணைத்து, தன் அழகான கையெழுத்தில் தானே எழுதி இவர் இந்நூலை உருவாக்கியுள்ளார். இந்த மூன்று நூல்களின் நகல் பிரதிகள் சொற்பொழிவு தினத்தன்று காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும்.
RSVP:
A. Annamalai: Gandhi Study Centre - gandhicentre@gmail.com;
Badri Seshadri - Kizhakku-p-padippakam - badri@nhm.in; 98840-66566
S. Kannan - musickannan@gmail.com; 98414-47974
S. Swaminathan - sswami99@gmail.com; 2467 1501
R. Gopu - writergopu@yahoo.com, 98417-24641
T. Sivasubramanian - siva.durasoft@gmail.com, 98842-94494

என் குறள் - இசைக்கவி ரமணன் (வீடியோ)


Tags - My Kural, Isaikavi Ramanan, Video