Subjugation of Nalagiri (Ajanta) - Prof. Sivaramakrishnan

Subjugation of Nalagiri

This is an episode from the life of the Buddha, one of the miracles he performed. This has been depicted in several locations in India in the form of painting or sculpture. Here, Prof. Sivaramakrishnan takes up the Ajanta painting in cave number 17. Devadutta, a cousin of the Buddha is jealous of the popularity of the Buddha and plans to kill him. His various attempts fail and finally he conspires with Ajatachatru, the crown prince of the kingdom. First he convinces Ajatachatry to jail his father and the current emperor Bimbisara. Once Ajatachatru captures power, the two plan to kill the Buddha. They feed the palace elephant Nalagiri with intoxicants and set the elephant in the path of the Buddha.

Nalagiri comes out of the palace and runs amok through the shops, tramples people on its way and grans and throws innocent passers-by with its trunk. People run helter skelter in fear. Finally, as the elephant sees the master - the Buddha - it quietens down and bows in front of him like a pet dog. The master blesses the elephant.

From the plotting to the subjugation, the scenes are depicted by a series of panels in Ajanta. Sivaramakrishnan explains the artistic nuances and the quality of painting in detail. The lecture is in Tamil.

நளகிரியை அடக்குதல்

புத்தரின் வாழ்வில் நடந்ததாகச் சொல்லப்படும் இந்தச் சம்பவம், இந்தியாவில் பல இடங்களில் ஓவியங்களாகவும் சிற்பங்களாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. அஜந்தாவின் 17-வது குகையில் தீட்டப்பட்டிருக்கும் இந்த ஓவியத்தொகுப்பை பேரா. சிவராமகிருஷ்ணன் விவரிக்கிறார்.

புத்தரின் ஒன்றுவிட்ட சகோதரன் தேவதத்தனுக்கு புத்தர்மீது பொறாமை. அவரைக் கொல்லப் பலமுறை திட்டம் தீட்டி அதில் தோல்வியுறுகிறான். அப்போது பட்டத்து இளவரசராக இருக்கும் அஜாதசத்ருவை, அவருடைய தந்தையும் பேரரசருமான பிம்பிசாரரைக் கைது செய்து ஆட்சியைத் தானே ஏற்றுக்கொள்ளுமாறு தூண்டுகிறான். அஜாதசத்ரு ஆட்சியைப் பிடித்தவுடன், இருவரும் சேர்ந்து திட்டம் தீட்டி புத்தரைக் கொல்ல முற்படுகின்றனர்.

நளகிரி என்ற அரண்மனை யானைக்கு போதை மருந்தை ஊட்டி, அதனை புத்தர் இருக்கும் இடத்தை நோக்கி அனுப்புகிறார்கள். போகும் வழியில் அது கடைத்தெருவில் கண்ணில் தென்பட்டவர்களையெல்லாம் மிதித்து, அடித்து, நொறுக்கி முன்னேறுகிறது. ஆனால் புத்தரைக் கண்டதும் அப்படியே அவர்முன் மண்டியிட்டு வழிபடுகிறது. புத்தர் யானையை ஆசீர்வதிக்கிறார்.

திட்டம் தீட்டுவதிலிருந்து யானை அடக்கப்படுவதுவரை வரையப்பட்டுள்ள படக் காட்சிகளையும் இந்தப் படங்களில் தெரியும் ஓவிய நுட்பங்களையும் சிவராமகிருஷ்ணன் அழகாக விளக்குகிறார்.