கல்வெட்டுகளில் வைகறை ஆட்டம், ஆ. பத்மாவதி

தமிழ்ப் பாரம்பரியம்
(Tamil Heritage Trust)
presents
கல்வெட்டுகளில் வைகறை ஆட்டம்
(Vaigarai Dance Inscriptions)
by 
முனைவர் ஆ. பத்மாவதி
(Dr. A. Padmavathi)
at 5.30pm on Saturday, April 4th, 2015
at Vinoba Hall, Thakkar Bapa Vidyalaya, T Nagar.

தலைப்பு பற்றி:

திருவிடைமருதூர் மற்றும் திருவெண்காடு கல்வெட்டுகளில் ‘வைகறை ஆட்டம்’ என்ற நாட்டியம் நிகழ்த்தப்பட்ட தகவல்கள் கிடைத்துள்ளன. அது எவ்வாறு நிகழ்த்தப்பட்டது என்ற விவரம் அக்கல்வெட்டுகளில் கூறப்படவில்லை. எனவே அது எவ்வகை ஆட்டம், அது ஆடப்பட்ட விதம், பாடப் பெற்ற இசைப் பாடல் ஆகியவை எதுவாக இருக்கும் என்பது பற்றி சிலப்பதிகாரம், தொல்காப்பியம் ஆகியவற்றின் துணையுடன் தனது ஆய்வை முன்வைக்கிறார்.

பத்மாவதி பற்றி:

முனைவர் ஆ. பத்மாவதி, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையில் கல்வெட்டுத் தொகுதிகள் பத்துக்கும் மேல் தனியாகவும் சேர்ந்தும் பதிப்பித்துள்ளார். திருவிந்தளூர்ச் செப்பேடு S.I.I.Vol.xxx, இவர் சமீபத்தில் பதிப்பில் கொண்டுவந்தது. செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தில் ‘புதிய நோக்கில் களப்பிரர் வரலாறு’ என்ற ஆய்வை நிகழ்த்தி ஆய்வேடு சமர்ப்பித்துள்ளார். இது விரைவில் நூலாக வெளிவரவிருக்கிறது. தனிப்பட்ட முறையில் நான்கு நூல்கள் வெளியிட்டிருக்கிறார். ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் எழுதிப் பல்வேறு ஆய்விதழ்களில் வெளியிட்டிருக்கிறார். கருத்தரங்குகள், பயிலரங்குகளில் தொடர்ந்து பங்கு பெற்று வருகிறார்.

RSVP:
S. Swaminathan - sswami99@gmail.com; 2467 1501
Badri Seshadri - Kizhakku-p-padippakam - badri@nhm.in; 98840-66566
A. Annamalai: Gandhi Study Centre - gandhicentre@gmail.com;
S. Kannan - musickannan@gmail.com; 98414-47974
R. Gopu - writergopu@yahoo.com, 98417-24641
T. Sivasubramanian - siva.durasoft@gmail.com, 98842-94494