About the Speaker and the Talk
Manohar Devadoss was born in 1936 and spent his formative years in Madurai. He started drawing very early in his childhood. He recalls that his school notebooks were full of drawings. Most of them were drawn while the teachers were handling a different type of easel. His teachers were indulgent and let his art and craft flourish. While studying in American College, Madurai he made a very detailed and intricate ink-drawing of the college chapel. He considers this as a watershed moment of his artistic career.
His marriage to Mahema, a gold medal-winning graduate in Fine Arts, in 1963 set in motion more than four decades of creative collaboration which did not weaken or wane despite Manohar battling falling eyesight and Mahema, crippling quadriplegia. He raced against time to draw and write, copiously. His drawings of many historic, social and cultural landmarks of Madurai and Madras are as evocative as the landmarks themselves invoking immediate association to these historic cities.
Manohar Devadoss has so far published seven books, six of them profusely illustrated. His books on Madurai have gone through several reprints. He is currently collaborating with Sujata Shankar to bring out ‘Madras Inked’
Manohar Devadoss will be moving us through a kaleidoscope of few landmarks and icons which he drew and portrayed during his career as an artist and writer, of the two cities he is intimately connected with, interspersing his talk with interesting, sometimes poignant stories from his life.
தலைப்பு – பேச்சாளர் பற்றி
1936-ல் பிறந்த மனோகர் தேவதாஸ் மிக சிறு வயதிலேயே படங்கள் வரைவதில் ஆர்வம் காட்டினார். மதுரையில் படிக்கும் போது, பள்ளி மற்றும் கல்லூரி நோட்டு புத்தகங்களில் இவர் வரைந்த படங்களே அதிகமாக இருக்குமாம். அமெரிக்கன் காலேஜில் படிக்கும் போது கல்லூரி வளாகத்தில் இருக்கும் தேவாலயத்தை இவர் வரைந்த மிக நுணுக்கமான மற்றும் விரிவான இங்க் படம்தான் அவருடைய நீண்ட கலைப் பயணத்தின் தொடக்கம் என்கிறார்.
தங்க பதக்கத்துடன் நுண்கலை பட்டம் பெற்ற மகிமாவை, 1963-ல் திருமணம் செய்து கொண்டார். இவர் மனோகர் தேவதாஸின் கலைப் பயணத்தின் வழிகாட்டி, துணைவி மற்றும் சீடராக அமைந்தார் எனலாம். திருமணமாகி சில வருடங்களிலியே இருவரும் பலஇடையூறுகளை சந்திக்க வேண்டியிருந்தது. மனோகர் தேவதாஸின் கண் பார்வை மங்க ஆரம்பித்து. பார்வை முற்றிலும் போவதற்க்கு முன் என்ன வரைய வேண்டுமோ அதை செய்யுமாறு மருத்துவர்கள் பணித்தார்கள். இதை தொடர்ந்து மகிமா ஒரு விபத்தில் அடிபட்டு கை,கால்கள் அனைத்தின் செயலிழந்தார். இந்த சோதனைகளையும் மீறி இருவரும் ஓருவருக்கொருவர் உதவியுடன் வாழ்க்கையின் சவால்களை எதிர் கொள்ள ஆரம்பித்தனர். மனோகர் நிறைய வரைய, எழுத ஆரம்பித்தார். மதுரை மற்றும் சென்னையின் முக்கிய வரலாற்று கலாச்சார சமுதாய சின்னங்களை பிரதிபலித்த கோட்டு ஓவியங்கள் மிக பிரபலமாகின. பேரும் புகழும் ஈட்டு தந்தன.
மனோகர் தேவதாஸ் இது வரை ஏழு புத்தகங்கள் வெளியிட்டுள்ளார். அதில் ஆறு படங்கள் கொண்டுள்ளவை. மதுரையை மையமாக்கி இவர் எழுதிய இரண்டு புத்தகங்களின் மறு பதிப்புகள் பல வந்துள்ளன. சுஜாதா சங்கருடன் இணைந்து உருவாக்கும் ‘மதராஸ் இங்க்ட்’ எனும் புத்தகம் விரைவில் வெளி வர இருக்கிறது.
மனோகர் தேவதாஸ் வரைந்த மதுரை மற்றும் மதராஸின் முக்கியமான சின்னங்களை பற்றியும் அவை வரையப்பட்ட பின்ணனி பற்றியும் சுவையான சொந்த கதைகளையும் நகைச்சுவை கலந்து பேச இருக்கிறார்.