ஓதுவார் சற்குருநாதன் அவர்களுடன் ஒரு உரையாடல் .
திரு பா சற்குருநாதன் தஞ்சாவூர் அருகே உள்ள கருக்காடிப்பட்டி என்ற ஊரில் பிறந்தவர். இவரது தந்தையார் ஆரம்பப் பள்ளி ஆசிரியர். சிதம்பரத்தில் உள்ள வி எஸ் ட்ரஸ்ட் என்ற அமைப்பின் தேவாரப் பாடசாலையில் ஐந்து ஆண்டுகள் முறையாகப் பயின்று தேவார இசைமணி பட்டம் பெற்றவர். இவருடன் பயின்ற 15 மாணவர்களும் இன்று பல்வேறு கோயில்களில் ஓதுவார் பணி செய்கின்றனர்.
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை மயிலாப்பூர் கபாலி கோயிலில் பிரதான ஓதுவார் மூர்த்தியாகப் பணியாற்றி வருகிறார்.