தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை -தொல்லியல் நோக்கில் தமிழ்ச் சமுதாயம் முனைவர் சொ .சாந்தலிங்கம்


முனைவர் சொ. சாந்தலிங்கம் அவர்கள் M.A., M.Phil., Ph.D., பட்டங்களுடன், தொல்லியல் மற்றும் கல்வெட்டியலில் மேற்படிப்புப் பட்டயமும் பெற்றுள்ளார். தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையில் முப்பது ஆண்டுகள் தொல்லியல் அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவரது பணியின்போது போளுவாம்பட்டி, கொடுமணல், அழகன்குளம், மாங்குடி, மாங்குளம் மற்றும் பல இடங்களில் தொல்லியல் அகழ்வாராய்ச்சியில் பங்கேற்றிருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள நூல்களில் சில: குடிமியான்மலை, வரலாற்றில் தகடூர், திருக்கோயில் உலா, தமிழர் பண்பாடுகள் , தேவாங்கர் வாழ்வும் வழிபாடும், தொல்லியல் ஆய்வுகள், மற்றும் மதுரையில் சமணம். மேலும் இணை ஆசிரியராகவும், இணைப் பதிப்பாசிரியராகவும் பற்பல நூல்களை வெளியிட்டுள்ளார். தேசிய, சர்வதேச அளவில் நடத்தப்பட்ட கருத்தரங்குகளில் ஆங்கிலம் மற்றும் தமிழில் 80க்கும் மேற்பட்ட தாள்களை வழங்கியிருக்கிறார். தற்போது தமிழ்நாடு அறநிலைத்துறையில் தொல்பொருள் ஆலோசகர், மதுரை பாண்டிய நாடு வரலாற்று மையத்தின் செயலாளர், இந்திய வரலாற்று காங்கிரஸில் வாழ்நாள் உறுப்பினர் போன்று பல இயக்கங்களில் பதவிகள் வகித்து வருகிறார். முனைவர் சொக்கலிங்கம் சிறந்த தொல்லியல் ஆய்வாளருக்கான ராஜராஜ சோழன் விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது, சிறந்த நூல் விருது (தமிழக அரசால் வழங்கப்பட்டது) மேலும் பல்வேறு தரப்பில் இருந்து 20க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளார்.