தமிழ்ப் பாரம்பரியம்
(Tamil Heritage Trust)
presents
சாதாரண மனிதர்களின் வாழ்வின் ஊடாகப் புதுக்கோட்டையின் வரலாறு
(History of Pudukkottai through Life of Common People)
by
க. இராசேந்திரன்
(K. Rajendran)
at 5.30pm on Saturday, December 6th, 2014
at Vinoba Hall, Thakkar Bapa Vidyalaya, T Nagar.
About the topic:
வரலாறு எனப்படுவது அரசர்கள், ஆட்சியாளர்கள் அல்லது
பிரபலமானவர்களின் கதைகள் மட்டுமல்ல. சாதாரணர்கள் இல்லாமல் நாடுகளும்
உருவாவதில்லை, வரலாறும் படைக்கப்படுவதில்லை. ஆனால், சாதாரணர்களின்
வாழ்க்கையைப் பதிவு செய்வதற்குத்தான் வரலாற்றாசிரியர்கள் இருப்பதில்லை.
இதற்கு மாறாக, க.இராசேந்திரன் அந்தச் செயலை மிகச் சிறப்பாகச்
செய்துவருகிறார். இந்தச் சொற்பொழிவின்போது, அறியப்படாத சில நபர்களின்
வாழ்க்கை மூலமாக புதுக்கோட்டையின் கடந்த நூற்றாண்டின் வரலாற்றைக் குறித்து
இராசேந்திரன் பேசப்போகிறார்.
About the Speaker:
தஞ்சாவூரில்
பிறந்த க. இராசேந்திரன், எம்.ஏ. எம்.எட், திராவிட இயக்கப்
பின்னணியிலிருந்து வந்தவர். இவருடைய தந்தை இராம. கல்யாணசுந்தரம்
புதுக்கோட்டையில் 1928-ல் சுய மரியாதை இயக்கத்தைத் தொடங்கியவர். 1944-ல்
திராவிடக் கழகக் கிளையை புதுக்கோட்டையில் நிறுவியவர்.
இராசேந்திரன் புதுக்கோட்டை அரசர் கல்லூரியில் பி.எஸ்சி
கெமிஸ்ட்ரி பட்டம் பெற்று, புதுக்கோட்டை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில்
பி.எட், எம்.எட் பயின்றார். புதுக்கோட்டை மாவட்டத்தில் பல இடங்களில்
ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் சென்னையைச் சுற்றியுள்ள பல பள்ளிகளில்
ஆசிரியராக இருந்துள்ளார். சென்னை பல்கலைக்கழகத்திலிருந்து எம்.ஏ வரலாறு
பட்டம் பெற்றுள்ளார்.
இராசேந்திரன் பத்திரிகைகளில் பல கட்டுரைகள் எழுதியுள்ளார்.
மூன்று நூல்களையும் எழுதியுள்ளார். மூன்று நூல்களுமே கையெழுத்துப்
பிரதிகளாக மட்டுமே உள்ளன. அச்சாக்கம் பெறவில்லை.
முதலாவது நூல், ‘புதுக்கோட்டை மாவட்டத்தில் சுய மரியாதை
இயக்கமும் திராவிடர் கழகமும் வளர்ந்த உண்மை வரலாறு’. இவ்வியக்கங்களின்
தோற்றம் குறித்த இதுபோன்ற ஒரு நூல் வேறு எந்த மாவட்டத்துக்கும் கிடையாது.
இவருடைய இரண்டாவது நூல், ‘புதுக்கோட்டை மாவட்டத்தில் காற்றில் கலந்த
கறுப்பு மெழுகுவர்த்திகள்’. திராவிடர் இயக்கத் தொண்டர்களைப் பற்றிய நூல்
இது. மூன்றாவது நூல், ‘புதுக்கோட்டைப் புதையல்கள்’. புதுக்கோட்டையின் மிகச்
சாதாரண மனிதர்கள் முதல் பிரபலமானவர்கள் வரை பலரது வாழ்க்கையைத் தொகுத்து,
அந்நகரைப் பற்றிய பல அரிய தகவல்களைச் சேர்த்து, பல்வேறு செய்தித்தாள்
துண்டுகளையும் இணைத்து, தன் அழகான கையெழுத்தில் தானே எழுதி இவர் இந்நூலை
உருவாக்கியுள்ளார். இந்த மூன்று நூல்களின் நகல் பிரதிகள் சொற்பொழிவு
தினத்தன்று காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும்.
RSVP:
A. Annamalai: Gandhi Study Centre - gandhicentre@gmail.com;
Badri Seshadri - Kizhakku-p-padippakam - badri@nhm.in; 98840-66566
S. Kannan - musickannan@gmail.com; 98414-47974
S. Swaminathan - sswami99@gmail.com; 2467 1501
R. Gopu - writergopu@yahoo.com, 98417-24641
T. Sivasubramanian - siva.durasoft@gmail.com, 98842-94494