தமிழ்ப் பாரம்பரியம்
(Tamil Heritage Trust)
presents
(On Nagore's Sufi Saint)
by
(Nagore Rumi)
at 5.30pm on Saturday, February 7th, 2014
at Vinoba Hall, Thakkar Bapa Vidyalaya, T Nagar.
தலைப்பு பற்றி:
16-ம் நூற்றாண்டில் தோன்றிய சூஃபி ஞானி, நாகூர் ஆண்டகை எனப்படும் காதிர் வலீ. உத்திரப்பிரதேசத்திலிருந்து தமிழ் நாட்டுக்கு வந்து நாகமரங்கள் அடர்ந்த காடாக இருந்த ஊரை நாகூர் என்று புகழ்பெறக்கூடிய ஊராக மாற்றிய மகான் அவர். அவரது சேவை, எந்தப் பாகுபாடுமின்றி, அரசர்களுக்கும் ஆண்டிகளுக்கும் சென்றடைந்தது. மண்ணையும் பொன்னாக்கிய மகான் அவர். ஜாதி, மதம் கடந்து, தொடர்ந்து நிகழ்ந்துகொண்டிருக்கும் அவரது அற்புதங்களால் நாகூர் புகழ் பெற்றுக்கொண்டே இருக்கிறது. அற்புதக் கடல் (கன்ஜுல் கராமாத்) என்று மிகச்சரியாக வர்ணிக்கப்படும் அவரது வாழ்க்கை வரலாறு பல உண்மைகளை நமக்கு உணர்த்தும். உங்களின் அன்பு மனிதன் மீதிருந்தாலும் சரி, இறைவன் மீதிருந்தாலும் சரி, அவரது வாழ்க்கையில் அதற்கான செய்தி உண்டு.
நாகூர் ரூமி பற்றி:
ஏ.எஸ்.முகமது ரஃபி என்பது இவரது இயற்பெயர். இவர் ஆம்பூரில் உள்ள மஸ்ருல் உலூம் கலை அறிவியல் கல்லூரியில் பேராசிரியராகவும் ஆங்கிலத் துறை தலைவராகவும் உள்ளார். நாகூர் ரூமி என்ற புனைபெயரில் தமிழில் எழுதிவருகிறார். இவரது முனைவர் பட்ட ஆராய்ச்சி கம்பனையும் மில்ட்டனையும் ஒப்பிட்டு எழுதப்பட்டது. அதனை The Cat and the Sea of Milk (A Comparative Study of Kamban and Milton) என்று புத்தகமாக வெளியிட்டுள்ளார்.
இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம், சூஃபி வழி போன்ற அறிமுக நூல்களை எழுதியுள்ள இவர், ‘நல்ல மனதில் குடியிருக்கும் நாகூர்’ என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார். சில ஆங்கிலப் புத்தகங்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். கவிதைகள், கதைகள், கட்டுரைகள் என்று பல வடிவங்களையும் திறம்படக் கையாண்டுள்ளார்.
RSVP:
A. Annamalai: Gandhi Study Centre - gandhicentre@gmail.com;
S. Kannan - musickannan@gmail.com; 98414-47974
R. Gopu - writergopu@yahoo.com, 98417-24641
T. Sivasubramanian - siva.durasoft@gmail.com, 98842-94494