ஆகமங்கள் கூறும் அரனின் வடிவங்கள்: சங்கர நாராயணன், 13 செப் 2015

[தேதி மாற்றப்பட்டுள்ளது. கவனிக்கவும்]


தமிழ்ப் பாரம்பரியம்

(Tamil Heritage Trust)
presents


ஆகமங்கள் கூறும் அரனின் வடிவங்கள்
(Iconography of Maheswara from the Agamas)

by 

சங்கர நாராயணன்
(Sankara Narayanan)

at 5.30pm on Sunday, September 13th, 2015
at Vinoba Hall, Thakkar Bapa Vidyalaya, T Nagar.

சைவ ஆகமங்கள், சைவ ஆலயங்களுக்கு மூலமான நூல்கள். அவற்றில் ஸகலம், நிஷ்கலம் மற்றும் ஸகல நிஷ்கலம் எனப்பெறும் உருவம், அருவம், உருவருவம் ஆகிய வழிபாடுகள் குறித்துக் கூறப்பட்டுள்ளன. இவற்றுள் உருவ வழிபாடு ஸகலோபாஸனை எனப்படும். இதற்குத் தகுந்தபடி தத்துவார்த்தமாகப் பல வடிவங்கள் ஆகமங்களில் கூறப்பெற்றுள்ளன. அத்தகைய வடிவங்களை மாஹேச்வர மூர்த்தங்கள் என்பர். இத்தகைய மூர்த்தங்களின் தத்துவம், இலக்கணம் மற்றும் பயன்பாடு குறித்து மூல ஆகமங்களில் என்ன கூறப்பட்டுள்ளது என்பது பற்றி சங்கர நாராயணன் பேசுவார்.

சங்கர நாராயணன் காஞ்சிப் பல்கலையில் வடமொழித்துறைப் பேராசிரியராக இருக்கிறார். sarasvatam.in என்ற இணையத்தளத்தில் கலை, கட்டுமானம், கல்வெட்டுகள், சுவடிகள் எனப் பல துறைகளில் எழுதிவருகிறார்.

RSVP:
S. Swaminathan - sswami99@gmail.com; 2467 1501
Badri Seshadri - Kizhakku-p-padippakam - badri@nhm.in; 98840-66566
A. Annamalai: Gandhi Study Centre - gandhicentre@gmail.com;
S. Kannan - musickannan@gmail.com; 98414-47974
R. Gopu - writergopu@yahoo.com, 98417-24641
T. Sivasubramanian - siva.durasoft@gmail.com, 98842-94494