அசல் மெட்ராஸ் இதுதான். கோட்டையை கட்டுவதற்க்காக உருவான நகரம். டெல்லியில் ஷா ஜஹானாபாத் என்ற முகலாய தலை நகரம் கட்டப்பட்ட போது தோன்றிய குடியிருப்பு.
300 ஆண்டுகளாக மதராஸ் குடிமக்களின் வாழ்க்கையை கட்டுப்படுத்தியது கருப்பர் நகரம் தான். அவர்களின் பொருளாதாரம், கலாச்சாரம், மதம் மற்றும் அரசியல் எதுவாக இருந்தாலும் சரி, அதை நிர்மாணித்தது இது தான்.இன்று சந்தும் பொந்துமாக இருக்கிறது? இதுவா? என்று கேட்கத் தோன்றும். தொழில் ஸ்தாபனமாய் வந்த கிழக்கிந்திய கம்பெனி உலகின் மிக பெரிய சாம்ராஜ்ஜியமானது ஜார்ஜ் கோட்டையின் மகிமையால் என்றால் அதில் பாதி பொறுப்பு கருப்பர் நகரத்தினையே சாரும்.
பேச்சாளர் வெங்கடேஷ் ராமகிருஷ்ணன் ஒரு வரலாற்று நாவலாசிரியர் மற்றும் கட்டுரையாளர். கல்கியின் பொன்னியின் செல்வனின் தொடர்ச்சியாக "காவிரி மைந்தன்" என்ற நாவலை அவர் எழுதியுள்ளார்.
அவரது நாவல்கள் அலாவுதீன் கில்ஜி, பாண்டியர்கள், சோழர்கள் மற்றும் பல்லவர்களைக் கையாள்கின்றன என்றாலும், அவருடைய புனைகதை அல்லாத படைப்புக்கள் பெரும்பாலும் சென்னை மற்றும் அதன் வரலாற்றைப் பற்றியவையே.
மதராஸின் வரலாறு குறித்து டெக்கான் கிரானிக்கிள் நாளிதழில் வாராந்திர கட்டுரை எழுதி வருகிறார். அவருடைய "கூவம் ஆற்றின் கலாச்சார வரைபடத் திட்டம்" பெரும் ஆர்வத்தையும் விவாதத்தையும் தூண்டியது. அதைப்பற்றி அவர் "டெட் டாக்" ஒன்றும் கொடுத்திருக்கிறார்.
“மதராஸ் லோக்கல் ஹிஸ்டரி ப்ராஜெக்ட்” என்ற பெயரில் ஃபேஸ்புக்கில் அவர் நடத்தும் குழுவில் 36,000 உறுப்பினர்கள் உள்ளனர். அந்த முயற்ச்சி ‘க்ரவுட்-ஸோர்ஸிங்’ முறையில் உருவாக்கப்பட்ட சென்னை நகரின் கடந்த காலத்தைப் பற்றிய மிகப்பெரிய தகவல் வங்கியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது