தமிழகத்தின் பாறைக் கோயில்கள்”. முனைவர் D தயாளன், Saturday, Feb 19th - 6 PM


“கல்லிலே கலைவண்ணம்: தமிழகத்தின் பாறைக் கோயில்கள்”. முனைவர் D தயாளன். தமிழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பாறை குகைகளும், பன்னிரண்டு ஒற்றைக்கல் கோயில்களும் உள்ளன. இந்தியாவின் பிற பகுதிகளில் உள்ள குகைக் கோயில்களுக்கு மாறாக, தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான குகை- மற்றும் ஒற்றைக்கல்-கோயில்கள் கடினமான பாறைகளில் தோண்டப்பட்டுள்ளன.
முனைவர் D. தயாளன், ஒரு புகழ்பெற்ற தொல்பொருள் ஆய்வாளர் மற்றும் கலை வரலாற்றாசிரியர் ஆவார். இந்திய தொல்லியல் துறையின் (ASI) முன்னாள் இயக்குனராக பணிபுரிந்தவர். தற்போது தமிழ்நாடு மாநில தொல்லியல் துறையின் தொல்லியல் ஆலோசகராக செயல்படுகிறார்.