Culturescaping by Prof. Swaminathan, 4th April 2020, Video



Tamil Heritage Trust  
presents

Culturescaping - கலாச்சாரவடிவுக்கலை 
by
Professor Swaminathan - பேராசிரியர் சுவாமிநாதன்

A Digital Lecture
4th April 2020, Saturday 5:30 PM.
Youtube link will be shared via Email, Facebook, WhatsApp and THT Website on the day of the digital lecture

About the Topic

Landscaping modifies the visible features of an area of land to make it appealing. Culturescaping, in addition, attempts to sensitise public towards our heritage, a bio-aesthetic, spiritual, religious, ecological approach to landscaping. This is but feeling our culture in every step. Covering space to uncover our past, Turning idle minutes into enchanting moments, Let us have yesterday, Ode to our multi-faceted culture, Rhythm, harmony and balance, … and peace, are some  interesting themes.
Culturescaping as Sanga-ch-cholai is an attempt to celebrate our 2000-year old heritage where nature around the people provided substance for literary metaphor. agath-th-thottam and purath-th-thottam celebrate the literary expressions synergising both nature and literature inspired by it, for a visual, emotional and literary treat two millenia later! Similarly yappu-th-thoppu would be an orchard consisting mango (sweet and sour), vila and vilva trees, for these trees form the basis for the mimetic mnemonics in Tamil prosody. Lastly, a flower garden with the 99 plants mentioned in the kurinji-p-pattu by kapilar.

About the Speaker

Professor Swaminathan had a thriving career as a faculty member in IIT Delhi, a premier engineering institution in India.  He sought voluntary retirement, first to work in the Integrated Rural Technology Centre in Kerala and then moved full time into Culture and Heritage. He first established Sudarsanam in Pudukkottai to document the heritage of Pudukkottai, his hometown.  Subsequently, he was instrumental in establishing the Tamil Heritage Trust in Chennai and remains it founder chairman.

தலைப்பு:

நிலவடிவுக்கலை (Landscaping) ஓரிடத்தின் காட்சியமைப்பை மேம்படுத்துகிறது.     கலாச்சாரவடிவுக்கலை (Culturescaping) கூடுதலாக பாரம்பரியம்உயிர் அழகியல்ஆன்மீகம்மதம் மற்றும் சூழலியல் மூலம் நிலவடிவுக்கலையை அணுகுகிறது. இதன் ஒவ்வொரு அடியிலும் நம் கலாச்சாரத்தை உணரலாம். வெற்று இடங்களை மாற்றி நம் கடந்த காலம் பற்றிய நினைவுகளைசெயலற்ற கணங்களில் நேற்றைய சாதனைகளை,  ன்முகத் தன்மை கொண்ட நம் கலாச்சார பாடல்கள் மற்றும் அவற்றில் ஒத்திசைந்த தாளம்நல்லிணக்கம்சமநிலை மற்றும் சமாதானம் முதலியவற்றைகலாச்சாரவடிவுக்கலை வழியாக வெளிப்படுத்த முடியும்.

சங்கச்சோலை எனும் கலாச்சாரவடிவுக்கலைநம் இரண்டாயிர வருட பாரம்பரியத்தையும்அதில் இயற்கைச்சூழல் எவ்வாறு இலக்கிய உருவகங்களுக்கு வழிகோலியது என்பதையும் கொண்டாடுகிறது. அகத்தோட்டம் மற்றும் புறத்தோட்டம் போன்றவை இயற்கையும்அதனோடு  ஒருங்கிணைந்த இலக்கிய வெளிப்பாடும் நம் கண்கள்புலன்கள் மற்றும் ரசனைக்கு விருந்தாகமுடியும். இதைப்போல் யாப்புத் தோப்பு என்ற பழத்தோட்டம் தேமாவும்புளிமாவும்விளாமும்வில்வமும் உள்ளடக்கியிருக்கும். இம்மரங்கள்தானே தமிழின் சீர் மற்றும் யாப்பிலக்கணத்தின் அடிப்படையாக விளங்குகின்றன! கடைசியாக கபிலர் குறிஞ்சிப் பாட்டில் கூறிய தொன்னூற்று ஒன்பது தாவரங்களைக் கொண்ட பூந்தோட்டமும் இதில் ஒன்றே.

பேச்சாளர்:

பேராசிரியர் சுவாமிநாதன் இன்று இந்தியாவின் தலை சிறந்த பொறியியல் கல்லூரி நிறுவனங்களில் ஒன்றான புது தில்லி இந்திய தொழில்நுட்ப கல்லூரியில் சிறப்பாக ஆசிரிய பணிபுரிந்தவர். அதிலிருந்து தன்னார்வ ஓய்வு பெற்று பின்னர் கேரளாவில் உள்ள ஒருங்கிணைந்த கிராமப்புற தொழில்நுட்ப மையத்தில் பணி செய்து,  அதன் பின் முழுநேரமாக இந்திய கலாச்சாரம்  மற்றும் பாரம்பரியத்தை மக்களுக்கு கொண்டு செல்லும் செயல்களில் ஈடுபடலானார்.  அவருடையசொந்த ஊரான புதுக்கோட்டையின் பாரம்பரியத்தை ஆவணப்படுத்த சுதர்சனம் என்ற அமைப்பை உருவாக்கியிருக்கிறார்சென்னையில் தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளையைத் தொடங்கிஅதன் தலைவராகவும் இருக்கிறார். 

Entry for the event is FREE; No registration required. The event will also be available LIVE. For further details, please visit http://www.tamilheritage.in & https://www.facebook.com/TamilHeritageTrust.

Tamil Heritage Trust
Contact: T Ravishankar 9500074247